'50 புதிய விமான நிலையங்கள்'

'50 புதிய விமான நிலையங்கள்'

1 mins read

திருச்சி: இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐம்பது புதிய விமான நிலையங்கள் கட்டப் படவிருக்கின்றன. மத்திய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு இந்த விவரத்தை வெளியிட்டார். திருச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான எரிபொருளுக்கான வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடு கிறது. அதை குறைத்தால் பயணி களின் எண்ணிக்கை அதிகரிக் கும். விமானங்களை இயக்கும் செலவுகளும் குறையும்," என்றார்.

"எனவே, விமான எரிபொருளுக் கான வரியைக் குறைக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக் கும் கடிதம் எழுதியுள்ளேன். இதை ஏற்று சில மாநிலங்கள் வரி யைக் குறைத்துள்ளன. தமிழகத் திலும் அவ்வாறு குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். "தமிழகத்தில் சேலத்தில் உள்ளதுபோல இந்தியாவில் தற்போது 32 விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வீணாகிறது. இவற்றைப் பயன் படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்று அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.