காமராஜர் சிலையிடம் மனு அளித்த கவுன்சிலர்கள்

காமராஜர் சிலையிடம் மனு அளித்த கவுன்சிலர்கள்

1 mins read

விருதுநகர்: நகராட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி கவுன்சிலர்கள் காமராஜர் சிலையிடம் மனு அளித்தது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் நகராட்சியில் ஆணையர் பதவிக்குக் கடந்த ஓராண்டாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் நகராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சிக் கூட்டமும் நடைபெறவில்லை. அதிமுக சார்பில் நகராட்சித் தலைவராக இருக்கும் சாந்திக்கு உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் அக்கட்சித் தலைமை வாய்ப்பு தராது என தகவல் பரவி உள்ளது. இதனால் நகராட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் அவரும் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒருங் கிணைந்து நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலை அருகே கூடினர். பின்னர் நகர மன்றத் தலைவி சாந்தியைக் கண்டித்து அச்சிலை யிடம் மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய திமுக கவுன்சிலர் ஆறுமுகம், விருதுநகர் நகராட்சி யில் எந்தவித பணிகளும் சரி யாக நடப்பதில்லை எனக் குற்றம் சாட்டினார். "நகராட்சி தலைவியை தொடர்புகொள்ள முடியாததால் காமராஜர் சிலையிடம் மனு கொடுத்துள்ளோம்," என்றார் கவுன்சிலர் ஆறுமுகம்.