சென்னை: அதிமுக ஆட்சியில் மாநில நிர்வாகத் துறையால் சுதந் திரமாகச் செயல்பட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயார் என்றார். எனினும் திமுக வினர் பேரவையில் பேசுவதற்கான உரிமையைச் சபாநாயகரிடம் இருந்து முறையாகப் பெற்றுத் தரும் தெம்பும் திராணியும் முதல் வர் ஜெயலலிதாவுக்கு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். "தமிழகத்தில் நீதித்துறைக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினை என்று வரும் போது சட்டப்பேரவையில் முழு ஆதரவு கொடுத்து வருகிறோம்.
"சட்டப்பேரவையை இரவு முழுவதும் விடிய விடிய நடத்தினா லும் பங்கேற்கத் தயாராக இருக் கிறோம். திமுக, காங்கிரஸ், இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கள் அவையில் கேள்விகள் கேட் டால் அமைச்சர்கள் திக்குமுக்காட வேண்டியுள்ளது," என்றார் மு.க.ஸ்டாலின். காவல்துறை மானியக் கோரிக் கையின்போது எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டால் ஆத்திரம் வரும் என்பதற்காகவே திமுகவின ருக்கு தடை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சி யில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தபோது பேர வைக்குத் தனியாக வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசி யதைச் சுட்டிக்காட்டினார். "அன்று ஜெயலலிதா பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப் பட்டதா? தற்போது பேரவையில் முறையாகப் பேச அனுமதி பெற்றுத் தரக்கூடிய தைரியம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?
"காவலர்களின் பல்வேறு பிரச்சினைகளை அத்துறையின் மானியக் கோரிக்கையில் பேச வேண்டும் என்று இருந்தோம். வாய்ப்புக் கிடைக்காமல் போய் விட்டது. அதனால்தான் மக்கள் மன்றத்தில் இதனை எடுத்துச் சொல்கிறோம்," என்றார் ஸ்டாலின். இதே கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்துத் தெரிவித்து ஜனநாயக கடமையாற்ற ஆளும் கட்சியினர் தடையாக இருந்தால் திமுக பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் அமைதியாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திமுக தயங்காது என்றார்.

