இந்திய நீர்மூழ்கி கப்பல் ரகசியம் அம்பலம்; விசாரணைக்கு உத்தரவு

இந்திய நீர்மூழ்கி கப்பல் ரகசியம் அம்பலம்; விசாரணைக்கு உத்தரவு

1 mins read

புது­டெல்லி: இந்தியக் கடற்­படை­யின் நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் குறித்த ரக­சி­யங்கள், ஆஸ்­தி­ரே­லிய பத்­தி­ரி கை­யின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யா­கி­யி­ருப்­பது பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்­தி­யது. டிசி­எஸ்­என் என்ற நிறு­வ­னம் இந்­தி­யா­வுக்­காக 6 நீர்­மூழ்­கிக் கப்­பல்­களைத் தயா­ரித்து வரு­கிறது. இந்நிலையில், அதன் வடி­வமைப்பு, தாக்கும் திறன் உள்ளிட்டவைகள் போன்ற ரகசியங்கள் கொண்ட 22 ஆயிரம் பக்க ஆவணங்கள் அம்பல மாகி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு மனோகர் பாரிக்­கர் உத்­த­ரவிட்டுள்ளார். "இவை இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. கணினிகளில் இருந்து ஊடுருவப்பட்டு இருக்க லாம்," என்றும் அவர் சொன்னார்.