பீகார் வெள்ளம்: மோசமான அணை நிர்வகிப்பே காரணம்

பீகார் வெள்ளம்: மோசமான அணை நிர்வகிப்பே காரணம்

2 mins read

­­­பு­து­டெல்லி: பீகாரில் இந்த ஆண்டு வழக்­க­மான அள­விற்­கும் குறை­வா­கவே மழை பெய்­துள்ள போதும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம் என்று கூறு­கிறார் சுற்றுச்சூழல் ஆய்­வா­ளர் ஹிமான்‌ஷு தாக்கூர். மத்தியப் பிர­தே­சத்­தின் பன் சாகர் அணையில் கடந்த ஒரு மாதத்­திற்­கும் மேலாக 95.22 விழுக்­காடு தண்ணீர் சேமிக்­கப் பட்டு வந்­துள்­ளது. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. பன்­சா­கர் அணையில் இனி மேல் குறைவான தண்ணீரே சேமிக்­க­மு­டி­யும் என்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி மொத்­த­மாக நீர் வெளி­யேற்­றப்­பட்­டது. இந்நிலையில், பரு­வ­மழை கார­ண­மாக வட மாநி­லங்களின் கங்கை உள்­ளிட்ட முக்கிய ஆறு­களில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியது.

எனவே, அணையில் உள்ள 18 மத­கு­களில் 16 மத­கு­களில் இருந்­தும் ஒரே நேரத்­தில் தண்ணீர் திறந்துவிடப்­பட்­டது. எனவே மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் சில பகு­தி­கள், பீகார் ஆகிய மாநி­லங்களைக் கடும் வெள்ளம் சூழ்ந்தது. "அணையில் இருந்து ஒரே நேரத்­தில் அதிக அளவில் தண்ணீர் திறந்­து­வி­டா­மல் இருந் திருந்தால் இந்த அள­விற்­குப் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­காது. "இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம்," என்று கூறி ­உள்­ளார் ஹிமான்‌ஷு தாக்கூர். மேலும் கங்கை­யில் பரக்கா தடுப்­பணை கட்­டி­ய­போது சரி யாக தூர்வாரப்­ப­டா­த­து கங்கை­யில் அதி­கப்­ப­டி­யான வெள்ளப் பெருக்கிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறு­கிறார்.

பீகாரில் மட்டும் இதுவரை குறைந்தது 22 பேர் வெள்­ளத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ளார்­கள். 23 லட்­சத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வீடுகளை இழந்­துள்­ள­னர். கடந்த நான்கு நாட்­க­ளாக பீகாரில் நிலைமை மிகவும் மோசம் அடைந்ததை­ய­டுத்து மாநில முதல்­வர் நிதிஷ்­கு­மார் கடந்த செவ்­வாய்­ கிழமை பிர­த­மர் மோடியைச் சந்­தித்து நிலைமையைச் சமா­ளிக்க உதவி கோரி­னார். மேலும் கங்கை நதியைத் தூர் வாரி இப்­பி­ரச்­சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் அவர் கோரிக்கை விடுத்­து உள்­ளார்.