வட இந்தியாவில் உணரப்பட்ட நிலஅதிர்வு

வட இந்தியாவில் உணரப்பட்ட நிலஅதிர்வு

1 mins read

புதுடெல்லி: மியான்மாரில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதன் தாக்கம் டெல்லி மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உணரப் பட்டது. இந்தியாவில் அசாம் மாநிலம் கௌகாத்தியில் நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டது. மேலும், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் நில நடுக்கம் உணரப்பட்டு உள்ளது. வீடுகள், அலுவலகத்தில் இருந்த வர்கள் அதிர்ச்சியில் வெளியே ஓடினர். கோல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.