புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டு உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ஸ்கார்பியன்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்த பின்னணியில் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து ரகசியங்கள் கசிந்திருக்க வேண்டும் எனவும் இதனால் தொழில்நுட்ப ரீதியாக எதையும் செய்ய முடியாது என்றும் பிரான்ஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி ஆற்றிய முன்னாள் பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவர் ரகசியங்கள் வெளியானதன் பின்னணியில் இருப்பதாக 'தி ஆஸ்திரேலியன்' செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ரகசியங்கள் கசிவு; பிரான்ஸ் அதிகாரி மீது சந்தேகம்
1 mins read

