ரோகித் தலித் மாணவர் அல்ல

ரோகித் தலித் மாணவர் அல்ல

1 mins read

நகரி: ஹைதராபாத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா தலித் அல்ல என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டதால் ரோகித் வெமுலா தன்னை மாய்த்துக் கொண்டார் என்றும் இதற்கு துணைவேந்தர் அப்பாராவே காரணம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ சங்கங்கள் போராட் டத்தில் குதித்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோகித் வெமுலா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ரூபன்வாலா தலைமையில் குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை நியமித்தது. இந்தக் குழுவின் விசாரணை அறிக்கையில் ரோகித் வெமுலா தலித் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.