புதுடெல்லி: இந்தியாவில் வாட கைத்தாய் முறையை வியாபார நோக்கோடு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக புதிய மசோதா ஒன்றை இந்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. இந்த மசோதா வுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் நாடாளு மன்றத்தில் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால் வெளிநாட்டு இந்தியர்கள் உட்பட வெளிநாட்ட வர்கள் இந்தியாவில் வாடகைத் தாயை அமர்த்திக்கொள்ள முடி யாது. இந்தியாவில் திருமண மாகாமல் சேர்ந்து வாழ்பவர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற இனிமேல் அனுமதி இருக்காது.
மேலும் சட்டவிரோதமாகவோ வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றால் அதில் தொடர்புடையவர் களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்து லட்சம் வரை அபராதமும் விதிக்க மசோதா வகை செய்கிறது. வாடகைத் தாயாக இருப்பவர், குழந்தை தேவைப்படும் தம்பதி யருக்கு நெருக்கமான உறவினராக இருக்க வேண்டும் என்பது விதி முறைகளில் ஒன்று.
ஆனால் இந்த உத்தேச மசோதாவைப் பல மகப்பேறு அமைப்புகள் குறை கூறியுள்ளன. புதிய மசோதாவால் கள்ளச் சந்தையில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியா, உலகின் வாடகைத் தாய் நிலையமாகக் கருதப்பட்டது.
வெளிநாட்டைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியர் பலர் தங்களுடைய கருவைச் சுமந்து குழந்தைப் பெற்றுத் தருவதற்காக இந்தியாவில் உள்ள உள்ளூர் பெண்களுக்குப் பணம் கொடுத்து வாடகைத் தாயாக அமர்த்திக் கொண்டனர். இந்தத் தொழிற்துறையின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் இருக் கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒழுங்கு முறை வகுக்கப்படாததால் இத்துறை பெரும் வியாபாரமாக உருவெடுத்து வருகிறது.
புதிய மசோதா பற்றி குறித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஷ்மா சுவராஜ், "திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாத தம் பதியர் மட்டுமே வாடகைத்தாயை அமர்த்த முடியும்," என்று குறிப் பிட்டார்.

