மோடி உருவத்தைப் பச்சை குத்தியதால் ராணுவ வேலை மறுப்பு

மோடி உருவத்தைப் பச்சை குத்தியதால் ராணுவ வேலை மறுப்பு

1 mins read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், திகம்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 23 வயது சவுரப் பில்கையன். 10-ஆம் வகுப்பு படித்த இவருக்கு ராணுவத்தில் சேரவேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால், எல்லா தகுதிகளும் இருந்தும் மோடி உருவத்தைப் பச்சை குத்தியிருந்ததால் வாலிபருக்கு ராணுவத்தில் சேரும் ஆசை நிறைவேறவில்லை. 2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 5- முறையாக நடந்த ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் அவர் ஒரு முறை கூட தேர்ச்சி பெறவில்லை. மோடி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

அனைத்து உடல் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றவர் கடைசியாக மார்பளவு எடுக்கும்போது அங்குள்ள மோடி உருவப் பச்சை காட்டிக்கொடுத்து விடுகிறது. "எனக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. அதற்கு பிரதமர் மோடி உருவத்தையும் முதல்-வர் சிவராஜ் சிங் சவுகான் உருவத்தையும் பச்சை குத்தியது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடி, முதல்வர் சவுகான் ஆகியோரை நேரில் சந்தித்து கேட்க விரும்புகிறேன்," என்றார் சவுரப்.