கேரள அரசு: உரிமம் இன்றி நாய் வளர்த்தால் நடவடிக்கை

கேரள அரசு: உரிமம் இன்றி நாய் வளர்த்தால் நடவடிக்கை

1 mins read

திருவனந்தபுரம்: வெறிநாய்களால் உயிரிழப்பு அதிகரித்து உள்ளதால் கேரளாவில் வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் இனி கட்டாயம் உரிமம் பெறவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் மனித உயிர்களைவிட நாய்கள் பெரிதல்ல என்ற அடிப்படையில் விஷ ஊசி போட்டு நாய்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேரளாவில் வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் இனி கட்டாயம் உரிமம் பெறவேண்டும். வாரம் ஒருமுறை தங்கள் நாய்களைக் கால்நடை மருத்துவமனைகளில் பரிசோதித்து அதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். இதை முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.