புதுடெல்லி: அழகாக இல்லை எனக் கூறி எனக்கு விமானப் பணிப்பெண் வேலை வழங்க ஜெட் ஏர்வேஸ் மறுத்துவிட்டது என சுமிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சுமிருதி இரானி நேற்று கலந்து கொண்டு பேசினார்.
"நான் இளம் வயதில் விமானப் பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் அழகாக இல்லை என்று கூறி என்னை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. அதன்பின் மெக்டொனால்டில் வேலை கிடைத்தது. தொலைக்காட்சி நடிகையாக பிரபலமடைந்தேன். அதெல்லாம் வரலாறு. "ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்காததற்காக நான் தற்போது கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்," என்று குறிப்பிட, அவரது பேச்சால் கூட்டத்தில் கலகலப்பு நிரம்பியது.

