விழுப்புரம்: அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட உதவித் தொகையை பெறுவதற்காக அரசு அலுவலர் லஞ்சம் கேட்டதால் 15 வயதுச் சிறுவன் பிச்சை எடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பவம் உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்தது. அங்குள்ள குன்னத்தூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. 48 வயதான இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கால மானார். கொளஞ்சியின் குடும்ப நிலை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அவரது குடும்பத்தாருக்கு சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு ரூ.12,500 உதவித் தொகையாக வழங்க சமூக நலத்துறை முன்வந்தது.
இதற்கான காசோலையை நேரில் வந்து பெற்றுச் செல்லுமாறு கொளஞ்சியத்தின் குடும்பத்தா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது 15 வயது மகன் அஜித்குமார் சில தினங் களுக்கு முன்னர் சமூக நலத்துறை அலுவலகத்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்த ஊழியர் கள், கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு கூறியுள்ளனர். உடனே அந்த அலுவலரை நேரில் சென்று சந்தித்துள்ளார் அஜித்குமார். ஆனால் அவரோ ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்க, மனமுடைந்த அஜித்குமார், பணம் இல்லாததால் வேறு வழியின்றி, ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம் பிச்சை கேட்டு கையேந்தி உள்ளார்.
மேலும் தன் கிராமம் முழுவதும் தெருத் தெருவாகச் சென்று வீடுதோறும் பிச்சை கேட்டுள்ளார். தன் கிராமம் வழியே சென்ற அரசுப் பேருந்துகளிலும் ஏறி பிச்சை எடுக்க அவர் தயங்க வில்லை. இதன் மூலம் இதுவரை அவர் இரண்டாயிரம் ரூபாய் சேர்த்தி ருப்பதாகத் தெரிகிறது. இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

