கனமழை: இருளில் மூழ்கிய 20 கிராமங்கள்

கனமழை: இருளில் மூழ்கிய 20 கிராமங்கள்

1 mins read
25e630ae-8ea1-4116-93b4-1ca3bac1f263
-

கனமழை காரணமாக ஏற்காட்டில் 20 கிராமங்கள் இருளில் மூழ்கின. தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் ஏற்காட்டில் 20 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய மழை விடியும் வரை நீடித்தது. இதனால் மலை கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக ஏற்காட்டில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் மாலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் வாகனமோட்டிகள் சில சிரமங்களை எதிர்கொண்டனர். படம்: தகவல் ஊடகம்