திருச்சி: தமிழக சட்டப்பேரவை இப்போது பஜனை பாடும், ஆரா தனை செய்யும், ஜால்ரா அடிக்கும் மடமாக உள்ளது எனத் திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு எனும் தலைப்பில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், சட்டப்பேரவை யின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டியது அவசியம் என்றார். "திமுக தலைவர் கருணா நிதியை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இப்படிப் பேசுவது தவறு என வாதிடுகிறோம், போராடுகிறோம்.
"அதிமுக எம்எல்ஏ ஒருவர், திமுக உறுப்பினர்கள் 89 பேரை வயக்காட்டு பொம்மைகள் என்று பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க மறுக்கின்றனர். 'கொத்தடி மைகள், சோற்றில் அடித்த பிண் டங்கள்' என்று அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து நான் பேசி யதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளனர்," என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். சட்டப்பேரவையில் திமுகவின ரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தமிழக அமைச்சர்கள் திணறுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவசர சிகிச் சைப் பிரிவில் கோமா நிலையில் உள்ளது என வர்ணித்தார்.
"கடந்த 3 ஆண்டுகளில் 277 கூட்டுக் கொள்ளைகள், 5,918 கொள்ளைகள், 33,115 திருட்டு கள், 5,400 கொலைகள் நடந்துள் ளதாக கோரிக்கை கொள்கை விளக்கப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வளவு கொலை, கொள்ளை நடந்தும் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். "பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். வீடுகளில் புகுந்து கொள்ளை, ரயில் கொள்ளை ஆகியவற்றையும் மீறி, இந்த அதிமுக ஆட்சியில் பறக்கும் விமானத்தை உடைத்து கொள்ளை நடந்தது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை," என்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்

