தமிழக அரசின் அலட்சியப் போக்கு: அன்புமணி கண்டனம்

தமிழக அரசின் அலட்சியப் போக்கு: அன்புமணி கண்டனம்

2 mins read
47e06c1b-50df-4dd7-ac97-7f2726a9aeac
-

சென்னை: சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்ட கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு பாமக இளையரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அலட்சியப் போக்கு டன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் பவானி பாசனப் பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் கடுமையாகப் பாதிக் கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2003ஆம் ஆண்டில் பவானி ஆற்றை முற்றிலுமாக முடக்கும் நோக்குடன் முக்காலி என்ற இடத்தில் அணை கட்ட கேரள அரசு முயன்றபோது அதற்கு பாமக தான் முதன்முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதைத் தொடர்ந்து பிற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த தால் அந்தத் திட்டம் அப்போது முறியடிக்கப்பட்டது என்றும் தற்போது பாலக்காடு மாவட்டத் தின் குளிர்பான நிறுவனத்திற் குத் தண்ணீர் வழங்குவதற் காகவே தடுப்பணை கட்டப்படு வதாகக் கூறப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். "இந்த விவகாரத்தின் தற்போ தைய நிலைக்கு தமிழக அரசின் அலட்சியம்தான் காரணம் என் பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக நலனைக் கடுமையாகப் பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் ஜெய லலிதா அரசு அலட்சியம் காட்டி யது கண்டிக்கத்தக்கது.

"அதேபோல், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல் படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக் கும் விஷயத்தில் தமிழகம் பல முறை வலியுறுத்தியும் வளைந்து கொடுக்காத மத்திய அரசு, சில கடிதங்களுக்கு தமிழகம் பதில ளிக்காத நிலையில், தமிழக அரசை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவதை விடுத்து, ஒரு தரப்பாக கேரளத் திற்கு அனுமதி அளித்திருப்பது துரோகம்," என அன்புமணி கடுமையாகச் சாடியுள்ளார். சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் மத்திய நடுவர் மன்றத்தால் அனுமதிக் கப்பட்ட 2.85 டி.எம்.சியைவிட அதிகமான தண்ணீரை கேரள அரசு தேக்கிவைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கேரளம் தடுப் பணை கட்ட மத்திய அரசு அனு மதி அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில் தமிழகத்தை வஞ்சிப்பதில் அண்டை மாநிலங்களுக்குத் துணைபோகும் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.