ஒலிம்பிக் நாயகியின் நேர்த்திக் கடன்

ஒலிம்பிக் நாயகியின் நேர்த்திக் கடன்

1 mins read
67368f80-ad7c-45d6-a2a8-31d7ded78293
-

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை பி.வி. சிந்து நேற்று அதி காலை கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு அவர் தனது குடும்பத்தினருடன் பாத யாத்தி ரையாக வந்து சேர்ந்தார். பாவாடை, தாவணி உடையணிந்திருந்த அவர், பயபக்தி யுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். நேர்த்திக் கடன் நிறைவேற்றியது குறித்துப் பேசிய சிந்து, "இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் வருவேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக் கொண்டேன். அதையொட்டி இங்கு வந்தேன்," என்றார். இந்த நிலையில் அவரைக் காண பெரும் கூட்டம் கூடிய தால் சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

கோயிலுக்கு பாவாடை தாவணியில் வந்த சிந்து. படம்: இந்திய ஊடகம்