சென்னை: பண மோசடி குற்றச் சாட்டின் பேரில் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்து கைதான நிலையில், அவரது மகனும் கைதாகலாம் எனக் கூறப் படுகிறது. பச்சமுத்துவின் மகன் ரவி மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. சென்னை, கோயம்பேடு பகுதி யில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை போலி பட்டா தயாரித்து, அவர் அபகரித்ததாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரத்தில் ரவி பச்சமுத்துவுக்கு கூலிப்படையினர் உதவி செய்ததாகவும் கூறப்படு கிறது. இதையடுத்து ரவியின் நில அபகரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐந்து பேர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
எனினும் போலிசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளனர். இந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம், ரவி பச்சமுத்து, அவர் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பித் துள்ளது. எனினும், ரவி மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்டோர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவல கத்தை மீண்டும் அணுகியுள்ளனர். இதன் பேரில் முழுமையான விசாரணை நடக்கும் பட்சத்தில் ரவி பச்சமுத்துவும் எந்த நேரத் திலும் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பச்சமுத்து. படம்: ஊடகம்

