சென்னை: அதிமுகவின் அராஜகப் போக்கை மக்கள் கவனித்து வரு வதாக திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கூறினார். சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், திரைப் பட நடிகர்களையும் மிஞ்சும் அள வுக்கு அதிமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் நடித்துக் கொண்டிருப்பதாக விமர் சித்தார்.
"முதல்வர் ஜெயலலிதாவை மகிழ்ச்சிப்படுத்த அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அவ ரின் புகழ்பாடுவதையும், அப்போதும் அவர் மகிழ்ச்சி அடையவில்லை எனில் திமுக தலைவர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை வசைபாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். "அதைக் கேட்டு முதல்வர் மகிழ்ச்சி அடைவதால், அவர்க ளின் பேச்சை முடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். புதிய உறுப்பினர்களின் கன்னிப் பேச்சி லும் கூட அதிமுகவினர் குறுக்கிடு கின்றனர்," என்றார் சந்திரசேகர். அதிமுக உறுப்பினர்கள் அவை மரபுகளை மீறி நடந்து கொள்வ தாகக் குற்றம்சாட்டிய அவர், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு அனைவரும் கடுமை யாக உழைக்க வேண்டும் என்றார்.
"சட்டப்பேரவையில் நடக்கும் கேலிக்கூத்துகள், எதிர்க்கட்சி களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளை எல்லாம் மக்கள் கவனிக்கின்றனர்," என்று சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

