முன்கூட்டியே வாக்காளர்களை 'கவனிக்கும்' அதிமுக புள்ளி

முன்கூட்டியே வாக்காளர்களை 'கவனிக்கும்' அதிமுக புள்ளி

1 mins read

சேலம்: நகராட்சித் துணைத் தலைவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குத் தலா அரைகிலோ ஆட்டுக் கறியும் கோழியும் கொடுத்தது ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன் என்ற அந்நபர் அதிமுக நகரச் செயலராக வும் பொறுப்பு வகிக்கிறார். தம்மை நகராட்சி கவுன்சி லராக தேர்வு செய்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவிக் கவே அவர் இவ்வாறு செய்ததாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்ப தால், வார்டு மக்களை கவர மோகன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப் பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். கடந்த உள் ளாட்சித் தேர்தலில் ஆத் தூரில் 21ஆவது வார்டில் போட்டியிட்டு வென்றார் மோகன். இதையடுத்து அவர் நகராட்சி துணைத் தலைவராகவும் தேர்வானார். இந்நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டி யிட்டு பதவியை தக்க வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

"தேர்தல் சமயத்தில் கெடுபிடி அதிகரிக்கும் என் பதால் இப்போதே வாக்கா ளர்களைக் 'கவனிக்கும்' முயற்சியில் அதிமுகவினர் இறங்கிவிட்டனர். ஒரே நாளில் 180 வீடுகளுக்கு அரைகிலோ கோழி, ஆட் டுக்கறி விநியோகித்துள் ளனர். இதுகுறித்து தலைமையிடம் தெரிவித்து, பதில் நடவடிக்கை எடுப் போம்," என்கிறார்கள் ஆத்தூர் திமுகவினர்.