சென்னை: சட்டப்பேரவை நடவடிக் கைகளில் பங்கேற்க திமுக உறுப் பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருவார கால தடை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைய டுத்து இன்று பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழக மின் வாரியத்தின் செயல்பாடுகளை திமுக தலைவர் கருணாநிதி கடு மையாக விமர்சித்து இருப்பதால், இன்றைய தினம் சட்டப்பேரவையில் திமுகவினர் அதுகுறித்து விவா தங்களை எழுப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி 79 திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து ஒரு வாரத் திற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட னர். சபாநாயகரின் இந்த நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீதமுள்ள திமுக எம்எல்ஏக்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளைப் புறக்க ணித்தனர். இதனால் எதிர்க்கட்சி வரிசையில் யாரும் இன்றியே கடந்த ஒருவாரமாக பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில், தடைக்காலம் முடிவடைந்ததால் திமுகவினர் இன்று பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாரியத்தை திமுக ஆட்சிதான் குட்டிச் சுவராக்கியது என்று அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளதாகவும் அதற்கு உண்மை விபரங்களின் அடிப்படை யில் விரிவாகப் பதில் தந்தி ருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

