ஆபாசப் பேச்சு ஆசிரியருக்குப் பாடம் கற்பித்த மாணவிகள்

ஆபாசப் பேச்சு ஆசிரியருக்குப் பாடம் கற்பித்த மாணவிகள்

2 mins read
e0cbfbb1-97de-4336-96f5-f0d56356447a
-

தன்னை நோக்கி கீழ்த்தரமாகப் பேசிய ஆசிரியரை மாணவி ஒருவர் தன் தோழியுடன் சேர்ந்து பொது இடத்தில் வைத்து நையப் புடைத்த சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நிகழ்ந்தது. பிரதிக்ஷ்யா ஆச்சார்யா என்ற அந்த மாணவி, உத்கல் பல்கலைக் கழக விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாக வந்த பினோத் குமார் சாஹு, 50, என்ற துணைப்பாட ஆசிரியர் அவரை நோக்கி கீழ்த்தர மான சொற்களைக் கூறியுள்ளார். இதைக்கண்ட பிரதிக்ஷ்யா, சாஹுவிற்குச் சரியான பாடம் புகட்டவேண்டும் என்று எண்ணி னார். உடனடியாக அவர் தன் தோழிக்குத் தகவல் தெரிவித்தார்.

பின் இருவரும் சேர்ந்து பொது இடத்தில் வைத்து மூங்கில் கழி களால் சாஹுவை விளாசினர். பின்னர் போலிசுக்குத் தகவல் தெரிவிக்க, அங்கு வந்த போலிசார் சாஹுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். "விசாரணைக்குப் பிறகு சாஹுவைக் கைது செய்தோம். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப் பொது இடத்தில் பலர் பார்க்க, பெண்களிடம் அடி வாங்கும் ஆசிரியர் பினோத் குமார் சாஹு, 50. படம்: இந்திய ஊடகம் படுவார்," என்று புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார். பிறகு, சம்பவம் குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்தார் பிரதிக்ஷ்யா. "தோழியைச் சந்திப்பதற்காக உத்கல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். ஆட்டோவில் இருந்து இறங்கி பெண்கள் விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கியதும் அருவருக்கத்தக்க சொற்களை நான் கேட்க நேர்ந்தது. திரும்பிப் பார்த்தால், தன் மோட்டார் சைக் கிளின் பின்னால் அமர்ந்து தன் னுடன் வரும்படி அந்த ஆடவர் அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் ஒருவரும் இல்லை. பிறகு என்னருகே வந்த அவர், சொல்லக் கூசும் வகையில் பேசினார். அங்கு சில ஆட்டோ ஓட்டுநர்கள் இருந்தபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

பயந்து போன நான் உடனே என் தோழி அற்பிதாவுக்குத் தகவல் தெரிவித் தேன். இரண்டு நிமிடங்களில் அவள் அங்கு வந்து சேர்ந்தாள். ஏதாவது கழி கிடைக்கிறதா என்று நாங்கள் சுற்றுமுற்றும் பார்ப்ப தற்குள் அந்த ஆள் ஓடிவிட்டார். ஆயினும், இன்னொரு சாலையில் அவரைக் கண்டதும் அற்பிதா அவரை அடிக்கத் தொடங்கிவிட் டாள். அதைக் கண்டு எனக்கும் தைரியம் வர, நானும் சேர்ந்து அடிக்கத் தொடங்கினேன்," என்று தமது பதிவில் பிரதிக்‌ஷ்யா கூறி உள்ளார்.