சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவைக்கு வந்தபோது அவரது வாகனத்தை காவல் துறையினர் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது வழக்கமான நடைமுறை என காவல்துறை தரப்பில் விளக் கம் அளிக்கப்பட்ட போதிலும் திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மேலும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரது வாகனங்களும் இதே போல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதிமுக உறுப்பினர்களின் வாக னங்களை போலிசார் சோதனை செய்யவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைக ளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி திமுக எம்எல்ஏக்கள் 79 பேரை அண்மையில் இடைநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். ஒருவார கால தடை முடிந்து மீண் டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் நேற்று தலைமைச் செயலகம் வந்தனர். அப்போது கோட்டையின் வாயிற்பகுதியிலேயே ஸ்டாலினு டைய காரை தடுத்து நிறுத்தி போலிசார் முழுமையாக சோத னையிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரின் கார் இவ்வாறு சோத னையிடப்படுவது இது முதல் முறை என்றும், இது கண்டிக்கத் தக்கது என்றும் திமுக வினர் அதிருப்தி தெரிவித்தனர்.

