சிறைவாசம் அனுபவிக்கும் 700 தமிழர்கள்: ஆந்திர அதிகாரி தகவல்

சிறைவாசம் அனுபவிக்கும் 700 தமிழர்கள்: ஆந்திர அதிகாரி தகவல்

1 mins read

வேலூர்: செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் 700 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சிறைத்துறை தலைவர் சுனில்குமார் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கைதான அனைவரும் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக பிடிபட்ட 700 தமிழர்கள் சித்தூர், கடப்பா, திருப்பதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் தமிழர்கள் தாக்கப்படுவதாகவும் சித்ரவதை செய்யப்படுவதாகவும் நீதிமன்றங்களிலும் அதிகாரிகளிடமும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். "ஆனால் விசாரணையில் அந்தப் புகார்களில் எந்தவித உண்மையும் இல்லை என்பது தெரிய வந்தது. செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்," என்றார் சுனில்குமார்.