விவசாயிகள் போராட்டம்; ஆயிரக்கணக்கானோர் கைது

1 mins read
edfc30be-7545-476f-af82-b7c90ac71965
-

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக ஆங் காங்கே பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைதாகினர். நீராதாரங்களைக் காக்கவும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவும் வலியுறுத்தி விவசாயிகள் நேற்று சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட னர். சில பகுதிகளில் முழு கடை அடைப்புப் போராட்டமும் நடை பெற்றது. காவிரியில் இருந்து தமிழகத் திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து நேற்று மாநிலம் தழு விய அளவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களில் பங் கேற்ற நூற்றுக்கணக்கான விவ சாயிகள் கைதாகினர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில், விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்- பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமி ழக ஆம் ஆத்மி கட்சியினர் மறி யலில் பங்கேற்றனர். இச்சமயம் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியன், முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நீரா தாரங்களை தமிழக அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றார். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியு றுத்தினார்.

காலில் விழும் போராட்டம் நடத்திய விவசாயிகள். படம்: ஊடகம்