சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளதாகச் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். பேரவையில் நேற்று முன்தினம் பேசிய அவர், பேரவை வளாகத் தில் திடீரென போலிஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். ஒருவார கால தடை முடிந்து திமுக உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பேரவைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய காரை தலைமைச் செய லகத்துக்குள் அனுமதிக்கும் முன்னர் போலிசார் தீவிர சோதனையிட்டனர். மேலும், திமுக எம்எல்ஏக்களின் கார்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கு திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பேரவையில் பேசிய துரைமுருகன், பாதுகாப்பு ஏற்பாடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். எனினும் அளவுக்கதிகமான கெடுபிடி நிலவுவதா கவும் திமுகவினர் வரும் வாகனங்களை எல்லாம் போலிசார் சோதனையிடுவதாக வும் அவர் சுட்டிக்காட்டினார்.

