சென்னை: மின்துறையில் நடைபெற்ற ஊழலின் எதிரொலியாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், முன் னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு என்ன தண்டனை எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மின் சாரக் கொள்முதலில் ஞானதேசிகன் ஒரு யூனிட்டுக்கு தலா 20 காசும் நத்தம் விஸ்வநாதன் தலா 2 ரூபாயும் கையூட்டு பெற்றதாகச் சாடியுள்ளார்.
"மின்சாரக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற ஊழல், தாது மணல் ஊழல் ஆகியவற்றின் பேரில் இருவர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சரியான நடவடிக்கைதான். எனி னும் இருவரைத் தவிர வேறு அதிகாரி களுக்கோ அல்லது ஆட்சியாளர் களுக்கோ ஊழல்களில் தொடர்பு இல் லையா?," என ராமதாஸ் கேட்டுள்ளார். "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக நீண்டகாலம் இருந்தவர் ஞானதேசிகன். அவரது காலத்தில் தான் மின்சாரக் கொள்முதலிலும் மின்திட்டங்களுக்கு அனுமதி அளிப் பதிலும் மிகப் பெரிய அளவில் முறை கேடுகள் நடந்திருப்பதாக ஆதாரங் களுடன் நான் குற்றம்சாட்டினேன். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக, திறமையான பல அதிகாரிகளைப் புறக்கணித்து, ஞான தேசிகனை தலைமைச் செயலாளராக அமர்த்தி அழகு பார்த்தது," என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

