மனைவியின் சிறப்பைப் போற்ற 'மனைவி தினம்'

மனைவியின் சிறப்பைப் போற்ற 'மனைவி தினம்'

1 mins read
5440f78b-ebbe-42f9-8295-1b5d10c1e877
-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நேற்று முன்தினம் மனைவி நாள் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தந்தையர் தினம், அன்னையர் தினம், கணவர் தினம், குழந்தைகள் தினம் கொண்டாடப் படுவதைப் போல் மனைவியின் சிறப்பைப் போற்றும் விதத்தில் 'மனைவி தினம்' என்று யாரும் கொண்டாடுவது இல்லை எனக் கோவில் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இக்கோவிலில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் அவர். இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர். படம்: ஊடகம்