சென்னை: தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந் ததை அடுத்து தமிழகத்துக்குப் புது ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிர ஆளுந ராகப் பதவி வகிக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை யும் கூடுதலாகக் கவனிப்பார் என அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. 83 வயதான ரோசய்யா கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழக ஆளுந ராகச் செயல்பட்டார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த பிரமுகர் சங்கர மூர்த்தியைத் தமிழக ஆளுநராக நியமிக்க பாஜக தலைமை விரும்பியதாகவும் இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு செய்தி கசிந்தது. இத்தகைய சூழ்நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் 74 வயது வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்க உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த காலத்தில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மத்திய உள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.
ஒருசில மாதங்களில் தமிழகத்துக்கு என தனி ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந் தின் மனைவி லதாவை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு விரும்புவதாகவும் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒருவரையே அம்மாநில ஆளுநராக்குவது மரபல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

