இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு நிரந்தரவாசத் தகுதி

இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு நிரந்தரவாசத் தகுதி

2 mins read

இந்­தி­யா­வில் முதலீடு செய்யும் வெளி­நாட்­டி­ன­ருக்கு நிரந்த­ர­வா­சத் தகுதி உள்­ளிட்ட சலுகை­­களை இந்தியா வழங்க­வுள்­ளது. இந்­தி­யா­வில் முத­லீ­டு­களைக் கவரும் முயற்­சி­யில் 18 மாதங் களில் யுஎஸ் 1.5 மில்­லி­யன் டாலர் (2.05 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீடு செய்யும் வெளி­நாட்­ட­வ­ருக்கு இந்­தி­யா­வில் நிரந்த­ர­வா­சத் தகுதி வழங்க இந்திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. அந்நிய முத­லீட்டை ஈர்த்து வரும் அதே­நே­ரத்­தில் இந்­தி­யா­வில் முதலீடு செய்யும் வெளி ­நாட்­டி­னருக்கு பல்வேறு சலுகை­களை­யும் இந்திய அரசு அளித்து வரு­கிறது. அதன்­படி, இந்­தி­யா ­வில் முதலீடு செய்யும் வெளி­நாட்­ட­வ­ருக்கு இந்திய நிரந்த­ர­வா­சத் தகுதி சலுகை அளிக்­க­வும் திட்­ட­ மி­டப்­பட்­டுள்­ளது. 'மேக் இன் இந்தியா' திட்­டத்தை ஊக்­கு­விக்­கும் நோக்கில், மத்திய அமைச்­ச­ரவை இந்த முடிவை எடுத்­துள்­ளது.

அதன்­படி, இந்­தி­யா­வில் வெளி­நாட்­டி­னர் 18 மாதங்களில் 10 கோடி ரூபாய் அல்லது மூன்று ஆண்­டு­களில் 25 கோடி ரூபாயை முதலீடு செய்தால் 10 ஆண்­டு ­களுக்கு நிரந்த­ர­வா­சத் தகுதி வழங்கப்­படும். நிபந்தனைக்கு உட்­பட்டு இது மேலும் 10 ஆண்­டு­ களுக்கு நீட்­டிக்­கப்­படும். இவ்வாறு செய்­யப்­படும் முத­லீ­டு­க­ளால் ஆண்­டுக்கு குறைந்தது 20 இந்­தி­யர்­களுக்கு வேலை வாய்ப்­புக் கிடைக்க வேண்டும். இதன்­மூ­லம், விசா நடைமுறை எளி­தாக்­கப்­படும். முத­லீட்­டா­ளர்­களும் அவர்­க­ளது குடும்பத் ­தி­ன­ரும் இந்­தி­யா­வில் குடி­யி­ருப்பு சொத்­துக்­களை வாங்க முடியும். மேலும், இந்­தி­யா­வில் அவர்­கள் கல்வி பயி­ல­வும் பணி­யாற்­ற­வும் இயலும். குடும்பத்­தி­னர் வேலை பெறவும் அனுமதி தரப்­படும். ஆனால், இந்தத் திட்டம் சீனா, பாகிஸ்­தான் நாட்­டி­ன­ருக்­குப் பொருந்தாது என மத்திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தொழில் செய்வதை எளிமைப்­படுத்­த­வும், முதலீடு, வருவாய், வேலை­வாய்ப்­பு­களை பெருக்­க­வும் ஏற்ற விதத்­தில் அந்நிய முதலீடு வரத்­துக் குவிவதை நோக்­க­மாக கொண்டு அந்நிய நேரடி முத­லீட்­டுக் கொள்கை­களில் மத்திய அரசு திருத்­தங்களைச் செய்­துள்­ளது. அதில் ஒன்றாக இந்த நிரந்த­ர­வா­சத் தகுதித் திட்டம் இடம்­பெ­று­கிறது. இதனால் இந்­தி­யா­வில் முதலீடு செய்வது அதி­க­ரிப்­ப­து­டன் வேலை­வாய்ப்­பும் பெருகும் என மத்திய நிதி­யமைச்­ச­ரும் பாஜக மூத்த தலை­வ­ரு­மான அருண் ஜெட்லி கூறி­யுள்­ளார்.