நேதாஜி பற்றிய ரகசிய கோப்பு வெளியானது

நேதாஜி பற்றிய ரகசிய கோப்பு வெளியானது

2 mins read
6c5e90cf-fb35-4f76-ac0b-3de94397720f
-

இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவப் படையை நிறுவி போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்-று ஜப்பான் அரசாங்கத்தின் 60 ஆண்டுகள் பழமையான ரகசிய ஆவணம் உறுதிப்படுத்தி யுள்ளது. ஜப்பானுக்கு பயணம் மேற் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் விசித்திரமான முறையில் காணாமல் போனார். அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று ஒரு தரப் பினரும் மறைவான இடத்தில் அவர் உயிருடன் வாழ்ந்தார் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர்.

அவரது உடல் ரஷ்யாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேதாஜிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டன. ஆனால் அப்படியும் தெளிவான ஒரு முடிவை விசாரணைக் குழுக் கள் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் ஜப்பானின் ரகசிய ஆவணங்களை லண்டன் இணையத் தளம் வெளியிட்டுள் ளது. 'சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பான அறிக்கை' என்-ற தலைப்பில் வெளியிடப்பட்ட தக வலில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் நிகழ்ந்த விபத்தில் நேதாஜி இறந்துவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் கீழே விழுந்தது. இதனால் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணம் செய்த சுபாஷ் சந்திரபோ-ஸ் தீக்காயங் களுடன் விமானத்திலிருந்து வெளியே விழுந்தார். அன்று பிற் பகல் 3.00 மணிக்கு தைப்பேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 7.00 மணியளவில் அவர் இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி அங்குள்ள சுடுகாட்டில் அவரது உடல் எரியூட்டப்பட்டது," என்று ஆவணம் தெரிவித்தது. அப்போது நேதாஜிக்கு வயது 48.