அரசு வேலை பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதமாக உயர்வு

அரசு வேலை பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதமாக உயர்வு

1 mins read

சென்னை: அரசு அலு­வ­ல­கங்களில் பணி­பு­ரி­யும் பெண்­களின் மகப்­பேறு கால விடுப்பு 9 மாதங்க­ளாக உயர்த்­தப்­படும் என்று தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாகப் பேரவை­யில் வியா­ழக்­கி­ழமை அறி­விப்பு ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. கடந்த சட்­ட­மன்றத் தேர்­த­லின்­போது விடுக்­கப்­பட்ட தேர்­தல் அறிக்கை­யில் பெண்­களுக்­கான மகப்­பேறு விடுப்­புக்­கா­லம் 9 மாதங்க­ளாக உயர்த்­தப்­படும் என்று அதி­முக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தது. அதை நிறை­வேற்­றும் வகை­யில் தமிழ்நாடு அர­சுப் பணி­களில் வேலை செய்­யும் பெண்­களுக்கு மட்­டும் மகப்­பேறு விடுப்­புக் காலம் 9 மாதங்க­ளாக நீட்­டிக்­கப்­படு­கிறது என்று தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.