சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

1 mins read

சென்னை: சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமானங்கள் தரையிறக்க முடியாததால் துபாய், பிராங்பர்ட், பெங்களூருவிலிருந்து வந்த விமானங்களில் ஒரு சில மீண்டும் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்பட்டது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது மழை பெய்தது. நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக் கேணி, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.