பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

1 mins read

சென்னை: தமிழ்நாட்டின் தற்காலிகப் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழ்நாட்டின் தற்காலிகப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.