சென்னை: தமிழக அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது கடந்த 2012 முதல் சென்னைப் பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் 11 வழக்குகளும் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சார்பில் 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த 18 வழக்குகளின் விசாரணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. இதையடுத்து நீதிபதி, நக்கீரன் கோபால் மீதான 18 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தும் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக விலக்கு அளித்தும் இதற்கு பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை
1 mins read
-

