சட்டப்பேரவையில் காவல்துறை அதிகாரி தீக்குளிக்க முயற்சி

சட்டப்பேரவையில் காவல்துறை அதிகாரி தீக்குளிக்க முயற்சி

2 mins read
be9cf6f7-3c42-44b2-8d95-5436fc190c8c
-

சென்னை: சென்னை சட்டப் பேரவையில் பலத்த பாதுகாப்பையும் மீறி பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் அனைத்து மக- ளிர் காவல் நிலைய ஆய்வாளர் காஞ்சனா (படம்) தற்கொலைக்கு முயன்றார். வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது 4ஆம் எண் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்த காஞ்சனா, பேரவை மண்டபத்திற்கு அருகே அரை லிட்டர் கேனில் கொண்டு சென்ற மண்ணெண் ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்த பிற காவலர்கள் காஞ்சனாவின் முயற்சியைத் தடுத்து அவரைக் காப்பாற்றினர். உயரதிகாரிகளின் நெருக் கடியே காஞ்சனாவின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மண்ணெண்- ணெய்யுடன் உள்ளே நுழைந்த காஞ்சனா 4ஆம் எண் நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட காவலர்களின் கண்களில் மண் ணைத் தூவி விட்டுத் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு என்று கூறி அண்- மையில் பேரவையில் 4 ஆம் எண் நுழைவாயிலின் அருகே நின்று செய்தி சேகரிக்க செய்தியாளர்- களுக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "ஆய்வாளர் காஞ்சனாவுக்குக் கடந்த சில மாதங்களாக உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார். நேற்று கூடப் பாதுகாப்புப் பணிக்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் அமைதி யாகவே இருந்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மண் ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்," என்றும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.