மோடி மீண்டும் பிரதமராக 70% ஆதரவு

மோடி மீண்டும் பிரதமராக 70% ஆதரவு

1 mins read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட் டால் அவருக்கு பத்தில் எழுவர் ஆதரவு தரத் தயாராக உள்ளனர் என்று புதிய கருத்தெடுப்பு முடிவுகள் கூறுகின்றன. அதே வேளையில், மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளதையும் அந்த ஆய்வு காட்டுகிறது. 'இன்ஷார்ட்ஸ்' என்ற செய்திச் செயலியும் 'இப்சாஸ்' என்ற சந்தை முகவையும் இணைந்து நடத்திய இந்தக் கருத்தெடுப்பில் 63,141 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் 70 விழுக்காட்டினர் மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவியில் அமர விருப்பம் தெரிவித் துள்ளனர். 17 விழுக்காட்டினர் மோடிக்கு மறுபடியும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறியுள்ளனர். இப்போதைய பாஜக அரசுக்கே மீண்டும் வாக்களிப்பேன் என்று 64 விழுக்காட்டுப் பெண்கள் கருத் துரைத்தனர். 18 விழுக்காட்டினர் பாஜகவை ஆதரிக்கமாட்டோம் என்று தெரிவித்தனர். கடந்த ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 7 வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்தெடுப்பில் பங்கேற்றோரில் 80 விழுக்காட்டினர் 35 வயதைத் தாண்டாதவர்கள்.