ஏழைகளுக்குப் பல திட்டங்கள்: வெங்கையா நாயுடு பெருமிதம்

ஏழைகளுக்குப் பல திட்டங்கள்: வெங்கையா நாயுடு பெருமிதம்

1 mins read

சென்னை: மத்திய அரசு ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், போராட்டங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்றார். "ஓய்வூதியத் தொகையை உயர்த்தி உள்ளோம். தொழி லாளர்களுக்கு நாள் ஒன் றுக்கு குறைந்தபட்ச சம்பள மாக ரூ.350 என்று நிர்ண யித்துள்ளோம். இந்நிலை யில் தொழிலாளர்கள் நடத்தியுள்ள போராட்டம் தேவையற்றது," என்றார் வெங்கையா நாயுடு.

சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய தியாகச் செம்மல் கள் குறித்து இன்றைய இளையர்களில் சிலருக்கு விவரம் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், நம்நாட்டின் சுதந்திரத்திற் காக பாடுபட்ட வீரர்கள் பிறந்த இடத்தை தெரிந்து கொள்வதற்காக 'திரங்கா யாத்ரா' என்ற பயணத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளதாகக் கூறினார். "மூவர்ணக் கொடியுடன் கூடிய இந்தப் பயணத்தை சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் தொடங்கி வைத் தார். அதையடுத்து 70 மத்திய அமைச்சர்கள், எம்பிக்களைக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்திய வீரர்கள் பிறந்த இடத்தில் அவர்களு டைய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யச் சொன்னார்," என்று வெங்கையா நாயுடு மேலும் தெரிவித்தார்.