பிள்ளையார் சதுர்த்தி: பாதுகாப்பு பணியில் 12,000 போலிசார்

பிள்ளையார் சதுர்த்தி: பாதுகாப்பு பணியில் 12,000 போலிசார்

1 mins read

சென்னை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இரு தினங்களுக்கு 12,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது இடங்களில் பிள்ளையார் சிலைகளை பூசைக்காக வைப்பவர்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்குழுவில் உள்ளவர்கள் 24 மணிநேரமும் போலிசாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.