சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனது மனைவிக்குத் தேமுதிகவில் முக் கியப் பதவி அளிக்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அநேகமாக தேமுதிகவின் செயல் தலைவராகப் பிரேமலதா நியமிக் கப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்சினைகள் காரண மாகத் தீவிர அரசியலில் ஈடுபடா மல் ஒதுங்கியுள்ளார் விஜயகாந்த். சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அவரது பிரசார உரைகளிலும் கூட வழக்கமான வேகமும் கார சார கருத்துகளும் இடம்பெற வில்லை என அரசியல் நோக்கர் கள் பலரும் விமர்சனம் செய்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரிடத் தில் கூட வெற்றி பெற முடியாமல் தேமுதிக படுதோல்வி கண்ட நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேறு கட்சி களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கட்சியில் பிளவு ஏற்பட்டு பெரும் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், தேமுதிகவைப் பலப் படுத்தும் நடவடிக்கைகளில் விஜயகாந்த் மும்முரமாக ஈடுபட் டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் நடவடிக்கையாகத் தனது மனைவி பிரேமலதாவைக் கட்சியின் செயல் தலைவராக நியமிக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
"இதன் மூலம் கட்சி நிர்வாகம் பிரேமலதாவின் கைக்குச் செல் லும். நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் திறமை தன் மனைவிக்கு உண்டு என விஜயகாந்த் நம்புகிறார். அதனால் தான் பதவியை அறிவிப்பதற்கு முன்பே, கட்சி நிகழ்வுகள் பல வற்றில் பிரேமலதாவை பங்கேற்கச் செய்து வருகிறார்.
"கட்சியின் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் நடை பெறும்போது செயல்தலைவராக தன் மனைவியை நியமிக்கும் அறிவிப்பை அவர் வெளியிடுவார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கூட இத்தகைய அறிவிப்பு வர வாய்ப்புள்ளது," என்கிறார்கள் விவரமறிந்த தேமுதிக நிர்வாகிகள் சிலர்.

