தமிழக அரசுக்கு ரூ.14,869 கோடி இழப்பு; ஊழல், முறைகேடுகளே காரணம் என்கிறார் அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுக்கு ரூ.14,869 கோடி இழப்பு; ஊழல், முறைகேடுகளே காரணம் என்கிறார் அன்புமணி ராமதாஸ்

2 mins read

சென்னை: முறைகேடு, ஊழல் காரணமாக தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் 14,869 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக் காட்டி அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதையே தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களின் நிதி, நிர்வாக செயல்பாடு குறித்து மத்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுவது வழக் கம். கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் குறித்து இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது. எனவே வழக்கமான நடைமுறை நிர்வாகச் செலவுகள் காரணமாகவே இத்தகைய இழப்புகள் ஏற்படுவதாக பல மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றன. இந்நிலையில் அன்பு மணி வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"முதல்வர் ஜெயலலிதா தலை மையிலான ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்படும். ஆனால், அவை செயல்படுத்தப்பட மாட்டாது என பாமக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் செயல்படுத்தி முடித்தி ருக்க வேண்டிய 60 திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தலைமை கணக்காயர் அலுவலகம் ஆதாரத் துடன் தெரிவித்திருக்கிறது.

"மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 60 திட்டங்கள் செயல்படுத்தப்படாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப் படாமல் வீணாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக செலவு அதிகரித் தல், திட்டங்களை செயல்படுத்தி முடித்த பின் அதிலிருந்து அர சுக்கு கிடைக்க வேண்டிய வரு வாய் தாமதமாதல் ஆகிய இழப்பு களும் ஏற்படுகின்றன," என அன்புமணி கூறியுள்ளார்.