தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: தமிழிசை கவலை

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: தமிழிசை கவலை

1 mins read

மதுரை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசுடன் தமிழக அரசு போட்டியிட வேண்டும் என்றார். "சட்டப்பேரவை நுழை வாயில் அருகேயே காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயன்றுள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே சாதாரண பெண்க ளின் பாதுகாப்பு குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக முதல்வர் அதிக அக்கறை காட்ட வேண்டும்," என்றார் தமிழிசை.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மோசமாக உள்ளதாகக் குறிப் பிட்ட அவர், உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக மேயர்களைத் தேர்வு செய்வது குதிரைப் பேரத்துக்கு வழி வகுக்கும் என்றார். "மத்திய அரசின் செயல்பாடு பாராட்டுக்குரிய தாக இருப்பதால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 65 விழுக்காட்டினர் விரும்பு கிறார்கள். சிறுவாணி, காவிரி விவகாரங்களில் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்," என்று தமிழிசை மேலும் கூறினார்.