கருணாநிதி: ஆக்கப்பூர்வமான திட்டங்கள் என்றாலே அதிமுகவினருக்கு ஒவ்வாமை

கருணாநிதி: ஆக்கப்பூர்வமான திட்டங்கள் என்றாலே அதிமுகவினருக்கு ஒவ்வாமை

2 mins read
fbe39359-3555-4a15-a22d-e50d6e0764a4
-

சென்னை: ஆக்கப்பூர்வ திட்டங் கள் என்றால் அதிமுகவினருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயங்கொண்டம் பகுதி மின் திட்டத்துக்காக ஆயிரக்கணக் கான விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 8,300 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதப் பணியும் மேற் கொள்ளப் படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்ப டைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அக்கோரிக் கையில் உள்ள அடிப்படை நியா யத்தை ஆராய்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "கர்நாடகாவில் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம். ஆனால், அவர்கள் ஆண்டு தோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரைக் கடலில் விடுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் கேரளத் தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2,400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.

"வெள்ள அபாயத்தைத் தடுப்ப தற்கும், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து வறட்சிப் பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கும், மாநிலத் திற்குள் பாயும் நதிகளை இணைக் கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ப தால் தற்போது அதிமுக ஆட்சி யில் அந்தத் திட்டங்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கேட்டுள்ள அவர், இந்த நிலையில், ஏ.சி.காமராஜ் என்பவர் வெளி யிட்டுள்ள நவீன நீர் வழிச் சாலைத்திட்டத்தை, அதிமுக அரசு பரிசீலிக்குமா என்பது சந்தேகம் தான் எனக் கூறியுள்ளார்.