சென்னை: மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதார ணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் என்று சாடியுள்ளார். "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்த ராகப் பணியாற்றிய கல்யாணி மதிவாணனை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்துள் ளது அரசு. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய முக்கியக் கடமை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு உள்ளது. இக்கடமையை நிறைவேற்றுவதற்கான தகுதி கல்யாணி மதிவாணனுக்கு சிறிதும் இல்லை. அவர் மனித உரிமைகளை மதிக்காதவர்," என ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டத்தை மிதிக்கும் அதிமுக அரசு: ராமதாஸ் விமர்சனம்
1 mins read
-

