கோவை: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய வந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தர்மபுரியை சேர்ந்த இவர்கள் அனைவரும் கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி ஆர்டிஓ சின்னச்சாமிக்கு தகவல் கிடைக்க, அவர் போலிசாருடன் செங்கல் சூளைக்குச் சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து 12 வயதுச் சிறுமி உட்பட, 14 பேர் மீட்கப்பட்டனர்.
செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைகள் 14 பேர் மீட்பு
1 mins read

