போலி வங்கி நடத்திய நான்கு பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு

போலி வங்கி நடத்திய நான்கு பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு

1 mins read

தர்மபுரி: போலி வங்கி நடத்தி வந்த நான்கு பேரை தர்மபுரி போலிசார் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட தனியார் வங்கியின் பெயருடன் கூடுதலாக சில எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு அவ்வங்கியின் கிளை போன்று நால்வரும் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். இதுகுறித்து தனியார் வங்கியின் சேலம் கிளை மேலாளர் போலிசில் புகார் அளித்தார். நான்கு மோசடிப் பேர்வழிகளும் வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்தது தெரிய வந்தது. நால்வரும் கைதான நிலையில், மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். அவருக்கும் இந்த மோசடியில் தொடர்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.