இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

1 mins read

திருச்சி: இலங்கையில் இருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்த இரு பெண்களை திருச்சி விமான நிலையத்தில் போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் காலை திருச்சி வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் வழக்கமான சுங்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது இரு பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், இருவரும் சொந்த நகைகளை அணிந்து வருவதுபோல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.