பக்தர்களைக் கவர்ந்த பிள்ளையார் சிலைகள்

பக்தர்களைக் கவர்ந்த பிள்ளையார் சிலைகள்

1 mins read
84343e38-6dd6-4ae8-ab29-40ed07991dba
-

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில், பலவிதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இச்சிலைகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. சிலைகளுக்கு தினந்தோறும் முறைப்படி பூசைகள் செய்யப்படுவதுடன், பல இடங்களில் பக்தர்களுக்குப் பிரசாதங்களும் விநியோகிக்கப்படுகின்றன. பொது இடங்களில் உள்ள சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்