பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து பத்து தினங்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் வன் முறை வெடித்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாண்டியா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். மேலும் அம்மாவட் டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி கள் மூடப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின. சிலர் சாலைகளில் பழைய பொருட்களை குவித்து, அவற்றுக்குத் தீ வைத்து எரித்தனர். கர்நாடகா ராஜ்ய ரைதா சங்கத்தினர் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே காவிரி ஆற்றில் நின்று கொண்டு 'சிறை நிரப்பும்' போராட்டத்தை நடத்தினர்.
வரும் 9ஆம் தேதியும் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை விடப்பட்டுள்ளன. இதற்கிடையே உச்சநீதிமன் றத்தின் உத்தரவு குறித்து விவாதிக்க பெங்களூருவில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
மாண்டியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் சாலைகளில் பழைய பொருட்களைக் குவித்து அவற்றுக்குத் தீ வைத்தனர். இதனால் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். படம்: தகவல் ஊடகம்

