ரயிலில் அடிபட்டு நால்வர் பலி

ரயிலில் அடிபட்டு நால்வர் பலி

1 mins read

சென்னை: ரயிலில் அடிபட்டு நால்வர் பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் இடையேயான ரயில் பாதையில் சென்ற 4 பேர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த 4 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டுமெனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.